மத்திய அரசின் கீழ் செயல்படும் காப்பர் நிறுவனத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10வது முடித்திருந்தால் போதும்.!
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் சம்பளத்துடன் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் ஹிந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 06-ஜூலை-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஆகஸ்ட் 08ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- தொழில்முறை ஆஃப்ரன்டீஸ் – 184 காலிப்பணியிடங்கள்.
சம்பளம் விவரம் – அரசு விதிகளின் படி வழங்கப்படும்.
கால அளவு – ஒரு வருடம்
வயது வரம்பு :
- குறைந்தபட்சம் 18 வயது முதல் 24 வயது வரை.
- அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 06 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 08 ஆகஸ்ட் 2023.
விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .
விண்ணப்பிக்கும் முறை :
- அரசு அப்ரன்டீஸ் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ தளமான www.apprenticeshipindia.gov.in/க்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் HCL (Hindustan Copper Limited) அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்து இறுதி தேதிக்குள் வந்து சேரும்படி தபால் மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையதிற்கு அனுப்ப வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் குறித்த விவரங்கள் 19 ஆக்ஸ்ட 2023இல் வெளியிடப்படும்.
- அதன் பின்னர் அவர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.