மத்திய அரசின் அணு உலை மையத்தில் ஆப்ரன்டீஸ் பயிற்சி.! 14 வயது முதல் விண்ணப்பிக்கலாம்.!
மத்திய அரசின் அணு உலை மையத்தில் ஆப்ரன்டீஸ் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் அணுமின் நிலைய மையத்தில் (NPCIL) அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடந்த 27-ஜூன்-2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 18ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..
பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :
- ஃபிட்டர் – 25 பணியிடங்கள்.
- மெக்கானிக்கல் – 09 பணியிடங்கள்.
- எலெக்ட்ரிக்கல் = 16 பணியிடங்கள்.
கல்வித்தகுதி :
- சம்பந்தப்பட்ட பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஒருவருட ITI எனப்படும் தொழிற்பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
- ரூ.7,700/- (ஒரு வருட ITI)
- ரூ.8.,855/- (இரண்டு வருட ITI)
வயது வரம்பு :
- குறைந்தபட்சம் 14 வயது முதல் 24 வயது வரை.
- அரசு இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
- மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.
விண்ணப்பம் தொடங்கிய தேதி – 27 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி – 18 ஜூலை 2023.
தபால் மூலம் இறுதி அப்ளிகேஷன் வர வேண்டிய தேதி – 08-08-2023.
விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .
விண்ணப்பிக்கும் முறை :
- அரசு அப்ரன்டீஸ் பயிற்சி மையத்தின் அதிகாரபூர்வ தளமான www.apprenticeshipindia.gov.inக்கு செல்ல வேண்டும்.
- அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் NPCIL அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, அதற்கான நகலை சேர்த்துஇறுதி தேதிக்குள் தபால் மூலம் உத்திர பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் நரோரா அணுமின் நிலையதிற்கு அனுப்ப வேண்டும்.
- அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் பணியமர்த்தப்படுவர்.
- அணுமின் நிலையத்திற்கு அருகில் இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கபடும்.