8-ம் வகுப்பு போதும்..! பல் மருத்துவ உதவியாளராக திருப்பூரில் அசத்தல் வேலை ..!
திருப்பூர் மாவட்ட வேலை : திருப்பூர் மாவட்டத்தில் மாவட்ட சுகாதார சங்கம் ஆட்சேர்ப்பு அறிவிப்பை 25.07.2024 அன்று வெளியிட்டுள்ளது. இதில் 36 காலியிடங்களுக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த பணிகளுக்கு ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கண்டு விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி | 25-07-2024 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 09-08-2024 |
காலியிட விவரம் :
பதவியின் பெயர் | காலியிட எண்ணிக்கை |
பல் அறுவை சிகிச்சை நிபுணர் | 5 |
பல் உதவியாளர் | 6 |
ட்ரைவர் | 1 |
நகர்ப்புற சுகாதார செவிலியர் | 9 |
மருந்தாளுனர் | 1 |
ஆடியோலஜிஸ்ட் | 1 |
ஆடியோமெட்ரிஷியன் | 1 |
ஆயுஷ் டாக்டர் | 2 |
விநியோகிப்பான் | 2 |
பல்நோக்கு பணியாளர் | 7 |
சிகிச்சை உதவியாளர் | 1 |
என மொத்தம் 36 காலியிடங்களை தமிழக அரசு அறிவித்துள்ளனர்.
கல்வி தகுதி :
- பல் மருத்துவராக பணியாற்ற BDS-யில் (Bachelor of Dental Surgery) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- பல் மருத்துவர் அல்லாது உதவியாளர் பணிகளுக்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8வது, 10வது, 12வது, அல்லது ஏதேனும் ஒரு பட்டம் அல்லது டிப்ளமோ இவற்றில் ஏதேனும் ஒன்று முடித்திருக்க வேண்டும்சம்பள விவரம் :
சம்பள விவரம் :
- பல் மருத்துவர் பணிக்கு ஊதியமாக ரூ.34,000/- வழங்கப்படும்
- உதவியாளர் பணிக்கு மாத ஊதியமாக ரூ.13,800/- வழங்கப்படும்
மேற்கொண்டு சம்பள விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பான PDF-ஐ பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.
வயது வரம்பு :
- இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 ஆண்டுகள் மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முகவரி :
- மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வு சங்கம் (மாவட்ட சுகாதார சங்கம்), 147- பூலுவபட்டி பிரிவு நெருப்பெரிச்சல் சாலை, திருப்பூர் – 641602.
என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- இந்த பணிக்காக விண்ணப்பிக்க முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான tiruppur.nic.in பார்வையிட்டு இந்த வேலைக்கான விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- அல்லது இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- பதிவிறக்கம் செய்த படிவத்தை நன்கு சரிபார்த்து, சரியாக பூரித்து செய்ய வேண்டும்.
- அதன்பின் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு 09-08-2024 தேதி மாலை 05.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- குறிப்பு : – (இந்தப் பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.) என அந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.