12-ம் வகுப்பு முடிச்சாச்சா ? ரூ 25,500-த்தில் ஹெட் கான்ஸ்டபிள் வேலை..!
CRPF ஆட்சேர்ப்பு 2024 : மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) தலைமை கான்ஸ்டபிள் பதவிக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கபட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | காலியிடங்கள் எண்ணிக்கை |
ஹெட் கான்ஸ்டபிள் | 17 |
தேவையான கல்வி தகுதி
- இந்த பணியில் சேர விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு / டிப்ளமோ அல்லது அதற்கு சமமான தேர்வை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் எவ்வளவு?
- மாதம் ரூ 25,500 முதல் ரூ 81,100
வயது வரம்பு
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்களின் வயது 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு மற்றும் கூடுதல் விவரங்களுக்கு அறிவிப்பைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை
- இந்த பணியில் வேலைக்கு சேர விருப்பம் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான @ crpf.gov.in க்கு செல்லவேண்டும்
- பின் உங்களுடைய மொழிக்கேற்ப மாற்றிக்கொள்ளுங்கள்.
- பின், இந்த வேலை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்யுங்கள்.
- அதன் பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- தகுதியான விண்ணப்பதாரர்கள், விண்ணப்பப் படிவத்தை நிரப்பவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை ஆஃப்லைன் முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புங்கள்.
முகவரி
Directorate General, Central Reserve Police Force, East Block-7, Level-4, Sector-1, R.K. Puram, New Delhi, Pin-110066 (Ministry of Home Affairs, Govt. of India)
HELP LINE NO.011-24368630
தேர்வு செய்யப்படும் முறை
- தேர்வு செயல்முறை உடல் தரநிலைத் தேர்வு (PST), உடல் திறன் தேர்வு (PET), ஆவணச் சரிபார்ப்பு, திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு, விரிவான மருத்துவப் பரிசோதனை (DME) மற்றும் மறுபரிசீலனை மருத்துவப் பரிசோதனை (RME) ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
முக்கிய தேதிகள்
விண்ணப்பம் தொடங்கிய தேதி | 15.07.2024 |
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி | 15.08.2024 |
முக்கிய விவரம்
அதிகாரப்பூர்வ இணையத்தளம் | க்ளிக் |
விண்ணப்ப படிவம் | க்ளிக் |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | க்ளிக் |