அரசு வேலையில் பணிபுரிய விரும்புவோருக்கு அரிய வாய்ப்பு..! மிஸ் பண்ணிடாதீங்க..!

ECIL Recruitment 2023

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Electronics Corporation of India Limited – ECIL) ஒரு முன்னணி பொதுத்துறை நிறுவனமாகும். ECIL நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்தில் காலியாக உள்ள சிஎஸ் பயிற்சியாளர் (CS Trainee) பதவிக்கு ஆள்சேர்ப்புக்கான ECIL Recruitment 2023 அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ECIL Recruitment
ECIL Recruitment [Image Source : ECIL]

விண்ணப்பதாரர் வயது :

சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவரின் அதிகபட்ச வயது வரம்பு 27 ஆக இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் தகுதி :

சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர் ஐசிஎஸ்ஐ எக்ஸிகியூட்டிவ் ப்ரோக்ராம் தேர்வில் தேர்ச்சி, எக்சிகியூட்டிவ் புரோகிராம் மற்றும் எக்ஸிகியூட்டிவ் டெவலப்மென்ட் ப்ரோக்ராம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனம்/கல்லூரி/பல்கலைக்கழகத்திலிருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.ecil.co.in சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

  • விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்யும் போது விவரங்களை எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.
  • தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்யவும்.
  • பதிவு செயல்முறையை முடித்த பிறகு, குறிப்பிடப்பட்ட தகுதிகளின் படி  விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் செயலில் இருக்கும் தனிப்பட்ட மின்னஞ்சல் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும்.
  • தனிப்பட்ட நேர்காணலில் கலந்துகொள்ள தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி :

சிஎஸ் பயிற்சியாளர் பதவியில் சேர ஆர்வம் மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர் ஆன்லைன் விண்ணப்பங்களை ஜூன் 31ம்  தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு முறை:

ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவுசெய்து சமர்ப்பித்தபின், விண்ணப்பதாரர்கள் தகுதி அடிப்படையில் 1:10 விகிதத்தில் பட்டியலிடப்படுவார்கள்.

ECIL Recruitment
ECIL Recruitment [Image Source : ECIL]

சம்பள விவரம் : 

சிஎஸ் பயிற்சியாளர் பதவிக்காக தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக வழங்கப்படும் என்று ECIL Recruitment 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Space docking
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple