டிப்ளமோ முடிச்சா போதும்! ரூ.18,000 சம்பளத்தில் கிருஷ்ணகிரியில் வேலை உங்களுக்கு தான்!

krishnagiri recruitment 2024

கிருஷ்ணகிரி : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் ஆலோசகர்/உளவியலாளர், மனநல சமூக சேவகர், ஸ்டாஃப் நர்ஸ் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் வேண்டும் என வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு சம்பளம் எவ்வளவு? கல்விதகுதி என்ன வேலைக்கு எப்படி விண்ணப்பம் செய்யலாம் என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

பதவியின் பெயர் எண்ணிக்கை
ஆலோசகர்/உளவியலாளர் 1
மனநல சமூக சேவகர் 1
ஸ்டாஃப் நர்ஸ் 1

தேவையான கல்வித்தகுதி

  • ஆலோசகர்/உளவியலாளர் பணிக்கு : உளவியல் அல்லது அப்ளைடு சைக்காலஜி அல்லது கவுன்சிலிங் சைக்காலஜியில் எம்.ஏ/எம்.எஸ்சி
  • மனநல சமூக சேவகர் பணிக்கு : சமூகப்பணியில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கவேண்டும்.
  • ஸ்டாஃப் நர்ஸ் பணிக்கு: பொது நர்சிங் அல்லது மனநல நர்சிங்கில் டிப்ளமோ/பட்டம் பெற்றிருக்கவேண்டும்.

சம்பளம் எவ்வளவு?

பதவியின் பெயர் சம்பளம்
ஆலோசகர்/உளவியலாளர் மாதம் ரூ.23,000
மனநல சமூக சேவகர் மாதம் ரூ.23,800
ஸ்டாஃப் நர்ஸ் மாதம் ரூ.18,000

வயது வரம்பு

  • வேலையில் விண்ணப்பம் செய்ய விண்ணப்பதாரர்களுடைய வயது வரம்பு குறிப்பிடப்படக்கூடாது. அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

விண்ணப்பம் செய்யவது எப்படி?

  • இந்த பணியில் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்கள் ஆப்லைன் முறைப்படி விண்ணப்பம் செய்யவேண்டும்.
  • முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://krishnagiri.nic.in/ இணையத்திற்கு சென்று வேலை தொடர்பான விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • விண்ணப்பம் செய்த படிவத்தை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:– முதல்வர். அரசு மருத்துவக் கல்லூரி, போலுப்பள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் 635 115

மேற்காணும் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் போது கீழ்காணும் ஆவணங்களை தவறாமல் இணைக்கப்பட வேண்டும்.

  • விண்ணப்பத்தில், விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஓட்டப்பட்டிருக்க வேண்டும்.
  • முழுமையான முகவரி மற்றும் அலைபேசி எண் குறிக்கப்பட்டிருக்க வேண்டும்.
  • முன்னுரிமைக்கான சான்றின் நகல் சுய சான்றொப்பமிட்டு
  • கல்வித் தகுதிக்கான சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு
  • சாதிச் சான்றின் நகல் சுய சான்றொப்பமிட்டு
  • இருப்பிடச் சான்றின் நகல் (குடும்ப அட்டை/ஆதார் அட்டை) சுய சான்றொப்பமிட்டு

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கிய தேதி 22-08-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 31-08-2024

முக்கிய விவரம்

அதிகாரப்பூர்வ இணையத்தளம் க்ளிக்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு க்ளிக்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்