8 -ஆம் வகுப்பு பாஸா? 15,000 சம்பளத்தில் அரசாங்க அலுவலக வேலை…உங்களுக்கு தான் .!
TNERC ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான காலியிடங்களை தற்போது தமிழிக அரசு அறிவித்துள்ளது, மேலும் இந்த வேலைக்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் பார்க்கலாம்.
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி | 08-07-2024 |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 31-07-2024 |
காலியிடங்கள் :
ட்ரைவர் | 1 |
அலுவலக உதவியாளர் | 4 |
- தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் டிரைவர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களை பணியமர்த்த மொத்தமாக 5 காலியிடங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
- இதற்கு விண்ணப்பித்து வேலை கிடைக்கும் தகுதி உடையவர்கள் சென்னையில் வேலை பார்க்க நேரிடலாம்.
தகுதி விவரங்கள் :
- விண்ணப்பதாரர்கள் கட்டாயமாக ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் 8வது , 10வது , 12வது முடித்திருக்க வேண்டும்.
- இரண்டு வேலைகளுக்கும் 8 வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
- ட்ரைவர் வேலைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இலகுரக மோட்டார் வாகன உரிமம் கட்டாயமாக பெற்றிருக்க வேண்டும்.
வயது மற்றும் சம்பள விவரம் :
வயது வரம்பு
|
ட்ரைவர் வேலை |
30 ஆண்டுகள்
|
அலுவலக உதவியாளர் | ||
சம்பளம்
|
ட்ரைவர் வேலை |
மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை
|
அலுவலக உதவியாளர் |
விண்ணப்பிக்கும் முகவரி :
- செயலாளர், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், 4-வது தளம் சிட்கோ கார்ப்பரேட் அலுவலகக் கட்டிடம், திரு.வி.க தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை-600032
- என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
- தமிழக அரசு அறிவித்துள்ள இந்த காலியிடங்களை விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.tnerc.gov.in/ சென்று இந்த வேலைக்காக அறிவித்துள்ள விண்ணப்பித்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
- இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தெரிந்து கொள்ள மற்றும் அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த PDF-ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை ஆஃப்லைன் என்பதால் பதிவிறக்கம் செய்த படிவத்தை ஒரு நகல் (Xerox) எடுத்து அதனை நன்றாக சரிபார்த்து படிவத்தை சரியாக நிரப்ப வேண்டும்.
- அதன்பின் நிரப்பிய படிவத்துடன் கேட்கப்பட்டுள்ள தேவையான ஆவணங்களின் நகல்களை அதனுடன் இணைக்க வேண்டும்.
- வேண்டுமென்றால் நம் தேவைப்பட்டால் படிவத்தை நிரப்பி தயாராக இருக்கும் படிவத்தை மேற்கொண்டு ஒரு நகல் வேண்டுமென்றால் எடுத்து வைத்து கொள்ளலாம்.
- இறுதியாக, நிரப்பிய படிவத்தை மேலே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி தேதியான 31-07-2024 -க்குள் தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
- (குறிப்பு :- விண்ணப்பக் கட்டணம் கிடையாது)