ITI/டிப்ளமோ படித்தவர்களுக்கு NLCயில் 3 வருட பயிற்சியுடன் கூடிய 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசுக்கு சொந்தமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் (NLC India) ஐடிஐ (ITI) எனும் தொழிற்கல்வி படிப்பை முடித்தவர்கள் மற்றும்ம் டிப்ளமோ படிப்பு முடித்தவர்களுக்கு 3 வருட பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இன்று (9 ஜூன் 2023) முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், கடைசி தேதியாக 9 ஜூலை, 2023 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அதிகபட்ச வயது வரம்பு 37 முதல் 42 வரை குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிப்பணிகள்–
டிப்ளமோ தகுதி பயிற்சி பெறுபவர் -Industrial Trainee [SME Operations]
ஐடிஐ தகுதி பயிற்சி பெறுபவர் – Industrial Trainee (Mines Support)
காலியிடங்கள் :
டிப்ளமோ தகுதி பயிற்சி பெறுபவர் -Industrial Trainee [SME Operations] – 238.
ஐடிஐ தகுதி பயிற்சி பெறுபவர் – Industrial Trainee (Mines Support) – 262.
கல்வித்தகுதி :
டிப்ளமோ (குறிப்பிட்ட பாடப்பிரிவு ) அல்லது ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி.
சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :
டிப்ளமோ :
முதல்வருடம் – 18,000/-
இரண்டாம் வருடம் – 20,000/-
மூன்றாம் வருடம் – 22,000/-
ஐடிஐ தகுதி :
முதல்வருடம் – 14,000/-
இரண்டாம் வருடம் – 16,000/-
மூன்றாம் வருடம் – 18,000/-
வயது வரம்பு (அதிகபட்சம்):
EWS/UR – 37 வயது.
OBC – 40 வயது.
SC/ST – 42 வயது.
தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பங்கள் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பயிற்சிக்கு அழைக்கப்படுவர்.
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி– 09 ஜூன் 2023.
விண்ணப்பிக்க கடைசி தேதி– 07 ஜூன் 2023.
விண்ணப்பிக்கும் முறை :
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரப்பூர்வ தளமானwww.nlcindia.inக்கு செல்ல வேண்டும்.
அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் உள்ள இன்று (09.06.2023) வெளியிப்படட்ட லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
அதில் ஏற்கனவே பயனர் ஐடி வைத்து இருப்பவர்கள் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லையென்றால் விவரங்களை கொடுத்து புதிய கணக்கு துவங்கி உள்ளீடு செய்ய வேண்டும்.
அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
