வேலைவாய்ப்பு

இளம் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையில் வேலைவாய்ப்புகள்… விவரங்கள் இதோ….

Published by
மணிகண்டன்

சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு தேசிய நெடுஞ்சாலை துறையான NHAIஇல் 50  வேலைவாய்ப்புகள் அறிவிய்க்கப்பட்டுள்ளன. 

தேசிய நெடுஞ்சாலைத்துறையான NHAI (National Highways Authority of India) வில் சிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 50 துணை பொறியாலாளர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மதாம் கடைசிக்குள் (ஜூன் 30, 2023) இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், UPSC கடந்த 2022இல் நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

காலிப்பணிகள் –

  • துணை பொறியாளர் (Deputy Manager (Technical))

காலியிடங்கள் :

  • பொது பிரிவு – 33.
  • SC பிரிவு – 4
  • ST பிரிவு – 1
  • OBC பிரிவு -11
  • EWS -1

மொத்தம் 50

கல்வித்தகுதி :

  • குறைந்தபட்சம் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • கூடுதலாக UPSC நடத்திய பொறியியல் சர்வீஸ் தேர்வில் (Engineering Service Exam) பங்கேற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூபாய். 15,600/- முதல்  39,100 (தகுதி அடிப்படியில்)
  • கூடுதலாக 5,400 ரூபாய் (கிரேடு ஊதியம்)

வயது வரம்பு (அதிகபட்சம்): 

  • அதிகபட்சம் 30 வயது வரை (அரசு விதிமுறைகள் படி தளர்வு அளிக்கப்படும்.)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • விண்ணப்பித்தவர்களின் UPSC 2022இல் நடத்திய Engineering Service Exam-இல் எடுத்துள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 30 ஜூன் 2023.

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய நெடுஞ்சாலை துறையின் அதிகாரப்பூர்வ தளமான vacancy.nhai.org க்கு செல்ல வேண்டும்.
  • அதில் ஏற்கனவே பயனர் ஐடி வைத்து இருப்பவர்கள் அதனை உள்ளீடு செய்யலாம். இல்லையென்றால் விவரங்களை கொடுத்து புதிய கணக்கு துவங்கி உள்ளீடு செய்ய வேண்டும்.
  • அதனை தொடர்ந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து உரிய விவரங்கள் கொடுத்து (குறிப்பிட்ட அளவில் புகைப்படம், சான்றிதழ் , உறுதி அறிக்கை) விண்ணப்பிக்கலாம்.
  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் அடுத்தகட்ட நேர்காணலுக்கு வரவழைக்கப்பட்டு, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Published by
மணிகண்டன்

Recent Posts

தென்னிந்தியாவின் பெருமை., தூத்துக்குடியில் முதல் ஐடி பார்க்! மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தூத்துக்குடி : தமிழ்நாடு தொழில்துறை சார்பில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மினி டைடல் பார்க் அமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்…

7 hours ago

சரித்திரத்தில் பெயர் பதித்த நிதிஷ்குமார் ரெட்டி! மெல்போர்ன் மைதானம் அளித்த கௌரவம்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது , பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியுடன் பார்டர்…

8 hours ago

சின்சான்ஜி கிறிஸ்தவ சபை 115வது பட்டமளிப்பு விழா : ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பட்டம் பெற்றனர்!

தென் கொரியா : சின்சான்ஜி கிறிஸ்தவ சபையானது, 1984-ல் தென் கொரியாவின் சியோலில் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச அளவில்…

10 hours ago

முகுந்தன் விவகாரம்., ” அது எங்கள் உட்கட்சி பிரச்சனை., நீங்கள் பேச வேண்டாம்! ” அன்புமணி காட்டம்!

விழுப்புரம் : நேற்று விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.…

11 hours ago

டிராவை நோக்கி ‘பாக்சிங் டே’ டெஸ்ட்! விட்டுக்கொடுக்காத ஆஸ்திரேலியா., திணறும் இந்தியா!

மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த…

11 hours ago

புதுச்சேரியில் ரூ.2 ஏற்றம் காணும் பெட்ரோல், டீசல் விலை! எந்த பகுதியில் எவ்வளவு? விவரம் இதோ…

புதுச்சேரி : புதுச்சேரி மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு புதுச்சேரி மாநிலத்தில் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கும்…

12 hours ago