தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 4000 உதவிப் பேராசிரியர் பணி.! உடனே விண்ணப்பியுங்கள்…

teachers recruitment board

TRB: தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4000 உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதாற்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ளது.

காலியிடங்களில் நிரப்ப ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதன் அதிகாரப்பூர்வ இணையதளமான Teachers Recruitment Board என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கடந்த மாதம் 14ம் தேதி இந்த பணிக்கான அறிவிப்பு வெளியானது. இந்த பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 28-03-2024 அன்று முதல் தொடங்கியது.

இதற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 29-04-2024 அன்றுடன் முடிவடைகிறது. உதவிப் பேராசிரியர் பணிக்கான தேர்வு தேதி 04-08-2024 அன்று எனவும் நேர்காணல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரம்

உதவி பேராசிரியர் – 4000

கட்டணம்

அனைவருக்கும் ரூ.600 எனவும், SC, SCA,ST மற்றும் PWD விண்ணப்பதாரர்களுக்கு ரூ.300 என்றும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கட்டண முறை

நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட முறைகளின் படி ஆன்லைன் பேமண்ட் செய்யலாம்.

தகுதி

விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளுக்கு ஏற்றபடி, முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். குறிப்பிட்ட பதவிகளுக்கு Ph.D. படித்திருக்க வேண்டும். மேலும், NET/ SLET/ SET/ SLST/ CSIR/ JRF ஆகிய தேர்வுகளில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது

அதிகபட்ச வயது வரம்பு 57 என குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பளம்

ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பு:- இந்த பணிக்கு விண்ணப்பிக்க குறிகிய காலம் நேரம் மட்மே உள்ளதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi
RNRavi