10-ம் வகுப்பு படிச்சாலே போதும் …! சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்றலாம் ..!

Legal Volunteer Job

இராமநாதபுரம் : சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக பணியாற்ற விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வேளைக்கு வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, திருவாடானை, இராமேஸ்வரம், கடலாடி ஆகிய ஊர்களில் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டம் சார்ந்த தன்னார்வத் தொண்டர்களாக பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது.

இந்த வேலையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் எவ்வளவு சம்பளம் எப்படி விண்ணப்பிக்கவேண்டும் என்கிற விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதனை பார்த்து விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

காலியிடங்கள் விவரம் 

சட்ட தன்னார்வலர் பணிக்கு இதனை காலியிடங்கள் இருக்கிறது என எண்ணிக்கை அறிவிக்கப்படவில்லை பல்வேறு காலியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவையான கல்வி தகுதி 

கல்வி தகுதி   பள்ளி இறுதி வகுப்பில் (10 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவராகவும், விரிவாகப் புரிந்துணரும் உடையவராகவும் இருத்தல் வேண்டும்.
தேவையான தகுதி 

சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்கள் இரக்கம்,
ஏனையவரின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் தன்மைகலப்படமற்ற தூய்மை ஆகிய அடிப்படை மனித குணங்களின் மீது ஒன்றி இருத்தல், எவ்வித பணப் பயனும் எதிர் பார்க்காமல் தன்னார்வசேவை புரிதல்,தங்கள் பணிகளில் இருந்து
வருமானத்தை எதிர் நோக்காதவர்களாகவும் ஆனால் இச்ச
மூகத்தின் பலவீனமானபிரினர், வறியவர்கள் ஆகியோரை
மேலுயர்த்துவதற்கான உறுதியும், உணரும் திறனும்
உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்

வயது வரம்பு  

  • இந்த பணியில் சேர உங்களுக்கு விருப்பம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் 18 வயதுக்கு மேற்பட்டோர் ஆக இருத்தல் வேண்டும்.

முக்கிய நாட்கள் 

 விண்ணப்பம் தொடங்கிய தேதி  07-05-2024
 விண்ணப்பிக்க கடைசி தேதி  17-05-2024

விண்ணப்பிக்கும் முறை 

  • இந்த வேளையில் சேர ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் https://ramanathapuram.dcourts.gov.in/notice-category/recruitments/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைக்கான விண்ணப்ப படிவத்தை க்ளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
  • அதன் பிறகு தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பத்தை நிரப்பவேண்டும்.
  • பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்ப படிவத்தை கொடுக்கலாம்.

அனுப்பவேண்டிய முகவரி 

  • Sd./S.Kumaraguru தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி,
  • இராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு,
  • ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,
  • இராமநாதபுரம்- 623 503.

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  க்ளிக் 
அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://ramanathapuram.nic.in/

குறிப்பு : இந்த பணி நிரந்தரமானது இல்லை எனவும், தேர்வு செய்யபடும் நாளிலிருந்து ஓர் ஆண்டு வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களை தெரிந்துகொள்ள மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்