பவர் கிர்டு இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி.! 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்…

Powe Grid Corporation Ltd

பவர் கிர்டு இந்தியாவில் அபிரன்டீஸ் பயிற்சிக்கு 10ஆம் வகுப்பு முதல் B.E/B.Tech முடித்தவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கீழ் செயல்படும் பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியாவில் அப்ரன்டீஸ் பயிற்சி பணிகளுக்கு வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (01-ஜூன்-2023) முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது. கடைசி தேதியாக ஜூலை 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரம் இதோ..

பணியின் விவரங்கள் மற்றும் காலியிடங்கள் :

  • பட்டதாரி (மின்சாரம்) – 282 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (கணினி அறிவியல்) – 8 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (எலக்ட்ரானிக்ஸ்/ தொலைத்தொடர்பு பொறியியல்) – 7 காலிப்பணியிடங்கள்.
  • HR நிர்வாகி – 94 காலிப்பணியிடங்கள்.
  • CSR நிர்வாகி 16 காலிப்பணியிடங்கள்.
  • PR உதவியாளர் 10 காலிப்பணியிடங்கள்.
  • ஐடிஐ – எலக்ட்ரீஷியன் – 161 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (எலக்ட்ரிக்கல்) – 215 காலிப்பணியிடங்கள்.
  • டிப்ளமோ (சிவில்) – 120 காலிப்பணியிடங்கள்.
  • பட்டதாரி (சிவில்) – 112 காலிப்பணியிடங்கள்.
  • சட்ட நிர்வாகி – 7 காலிப்பணியிடங்கள்.
  • செயலக உதவியாளர் – 3 காலிப்பணியிடங்கள்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 10 ஆம் வகுப்பு முதல் ITI/ டிப்ளமோ, B.E / B.Tech, MBA வரை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஏற்றவாறு படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • ரூ.13,500 முதல் தகுதி அடிப்படியில் சம்பளம் வகுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு : 

  • குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

  • மதிப்பெண் அடிப்படையில் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படுவர்.

விண்ணப்பம் தொடங்கிய தேதி – 01 ஜூலை 2023.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 31 ஜூலை 2023.

விண்ணபக்கட்டணம் – குறிப்பிடப்படவில்லை .

விண்ணப்பிக்கும் முறை : 

  • பவர் கிர்டு கார்ப்பரேஷன் இந்தியா அதிகாரபூர்வ தளமான www.powergrid.inக்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து அந்த பக்கத்தில் இந்தியாவில் எந்த பகுதியில் , எந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமோ அதற்கான லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்னர், அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான ஆவணங்களை பூர்த்தி செய்து, விண்ணப்பிக்க வேண்டும்.
  • அதில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு பின்னர் அப்ரன்டீஸ் பயிற்சிக்கு பணியமர்த்தப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்