10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! ICMR-இல் பல்வேறு காலிப்பணியிடங்கள்.!

ICMR

10, 12ஆம் வகுப்பு படித்தவர்கள் ICMR-இல் டெக்னீஷியன்கள் மற்றும் பல்பணி ஊழியர்களுக்கான காலிப்பணியிடங்களை அறிவித்துள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் அமைந்துள்ள தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR ( National Institute for Research in Environmental Health) இல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு டெக்னீசியன் மற்றும் உதவியாளர்கள் (Multi Tasking Staffs) பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுளள்ன. இதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் ICMR இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை தபால் மூலம் போபால் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் இதற்கான கடைசி தேதி ஜூலை 15, 2023 என அறிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணிகள்

  • குரூப்- சி டெக்னீசியன்கள்.
  • பல்பணி ஊழியர்கள் ( MultiTasking Staffs).

காலியிடங்கள் :

  • டெக்னீசியன்கள் – 20.
  • பல்பணி ஊழியர்கள் (MultiTasking Staff)s – 8.

கல்வித்தகுதி :

  • குறைந்த பட்சம் 10வது மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண் உடன் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் (மாத அடிப்படையில்) :

  • 18,000 முதல் 68,200 ரூபாய் வரை (அனுபவம் மற்றும் தகுதிக்கு ஏற்ப)

வயது வரம்பு –

  • டெக்னீசியன் வேலைக்கு 28வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • பல்பணி ஊழியர் வேலைக்கு 25வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/ST பிரிவினருக்கு 5 வயது தளர்வு.
  • OBC பிரிவினருக்கு 3 வயது தளர்வு.
  • மாற்று திறனாளிகளுக்கு 10 வயது தளர்வு. (40 சதவீதத்திற்கு மேல்)

தேர்வு செய்யப்படும் முறை : 

  • தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் செய்யப்படும் நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • 300 ரூபாய் வங்கி வரையோலை (DD- Demand Draft) குறிப்பிட்ட முகவரிக்கு எடுத்து விண்ணப்ப படிவத்துடன் எழுதி அனுப்பி வேண்டும்.
  • SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு டிடி எடுப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி – 15 ஜூலை 2023 (தபால் மூலம்)

விண்ணப்பிக்கும் முறை : 

  • தேசிய சுற்றுச்சூழல் சுகாதார ஆராய்ச்சி மையமான ICMR இணையதளமான  www.igcrect.injoinindiannavy.gov.in -க்கு செல்ல வேண்டும்.
  • அதனை தொடர்ந்து குறிப்பிட்ட வேலைக்கான அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  • அதில், பெயர், முகவரி, படிப்பு, உள்ளிட்டவையை நிரப்பி அப்ப்ளிகேஷனில் குறிப்பிட்ட முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
  • அந்த அப்ளிக்கேஷன் உடன் 300 ரூபாய் வங்கி வரையோலை மற்றும் தகுதி சான்றிதழ் நகல் ஆகியவற்றை இணைத்து அனுப்ப வேண்டும்.
  • அந்த அப்ளிகேஷன் மூலம் தேர்ந்தெடுக்கும் நபர்கள் தேர்வு எழுத அழைக்கப்படுவர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
TN CM MK Stalin - ADMK Chief secretary Edappadi palanisamy
NTK Leader Seeman - Madurai High court
BYD Yangwang U9
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School