10 மற்றும் ஐடிஐ முடித்திருந்தால்…மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு.!

Railway Apprentice Recruitment 2024

Central Railway: தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பை ரயில்வே ஆட்சேர்ப்பு பிரிவு வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு மத்திய இரயில்வே ராய்ப்பூர் பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடங்களில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

மொத்தம் 733 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி கடந்த 12-ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வருகின்ற 12-ம் தேதி நிறைவடைகிறது.

பணியின் விவரம்

  1. தச்சர் – 38
  2. COPA – 100
  3. வரைவாளர் (சிவில்) – 10
  4. எலக்ட்ரீஷியன் – 137
  5. மெக்கானிக்கல் – 5
  6. ஃபிட்டர் – 187
  7. மெஷினிஸ்ட் – 4
  8. ஓவியர் – 42
  9. பிளம்பர் – 25
  10. மெக்கானிக்கல் (ரேக்) – 15
  11. SMW – 4
  12. ஸ்டெனோ (ஆங்கிலம்) – 27
  13. ஸ்டெனோ (இந்தி) – 19
  14. டீசல் மெக்கானிக் – 12
  15. டர்னர்-4
  16. வெல்டர் – 18
  17. வயர்மேன் – 80
  18. இரசாயன ஆய்வக உதவியாளர் – 4
  19. டிஜிட்டல் போட்டோகிராபர் – 2

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது 15 முதல் அதிகபட்ச வயது 24 வயது வரை எனவும், விதிகளின்படி வயது தளர்வு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி

10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் விவரம் குறித்த கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வலைதளமான South East Central Railway என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள படி, கல்வித் தகுதி மற்றும் வயது ஆகியவற்றின் அடிப்படையில் ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. விண்ணப்பிக்கும் முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் முழுமையாகச் சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்