விமானத்திற்கு இணையான வேகத்தில் பறந்த ஜெட்மேன்! விபத்தில் பலியான பரிதாபம்!

விமானத்திற்கு இணையான வேகத்தில் பறந்த ஜெட்மேன் விபத்தில் உயிரிழந்தார்.

ஜெட்மேன் என்று செல்லமாக அழைக்கப்படும் 36 வயதான வின்சென்ட், இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் ஜெட் பேக் அணிந்து கொண்டு மணிக்கு 400 கிலோ மீட்டர் வேகத்தில், வானில் பறந்து பல்வேறு சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். ஏராளமான வான் சாகசங்களை நிகழ்த்தியுள்ள இவர், துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் இருந்து குதித்து, ஸ்கை டைவிங் செய்தது,இவரது சாகசங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

இவர் ஜெட்பேக் சூட் அணிந்து கொண்டு விமானத்தின் வேகத்துக்கு இணையாக பறந்து சென்ற, இவரது வீடியோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மலைகளுக்கு மேலாக விமானங்கள் பறந்து செல்லும்போது, ஜெட்பேக் சூட்டுடன் விமானத்துக்குள் குதித்து இவர் சாதனை படைத்த வீடியோவும் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, அன்று துபாய் நகருக்கு அருகே வெளியே பாலைவனத்தில் உள்ள ஜெட்மேன் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்ட போது, விபத்தில் சிக்கி பலியானார். இது குறித்து ஜெட்மேன் துபாய் நிறுவனம் கூறுகையில், வின்சென்ட் ஒரு திறமையான விளையாட்டு வீரர். எங்கள் அணியினரால் மிகவும் நேசிக்கப்பட்ட மரியாதைக்குரிய உறுப்பினர் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த மரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் செய்தி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த இவர் மிகவும் குறுகிய கால இந்த வாழ்க்கையில் எங்களுக்கு பல கனவுகள் உள்ளன என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது கனவுகள் நிறைவேற்றப்படாமல் மிகவும் இளம் வயதிலேயே உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.