ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

MK Stalin

ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான் என முதல்வர் ட்வீட் 

ஜப்பானில் ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஜப்பான் என்றாலே புதுமையும் கண்டுபிடிப்புகளும்தான்! கட்டுமானம், சுரங்கம் போன்ற மிகக் கடுமையான மனித உழைப்பைக் கோரும் துறைகளில், பணிகளை எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்து முடித்திடும் கருவிகளை உற்பத்தி செய்யும் நூற்றாண்டு பழமையான கோமாட்சு நிறுவனத்தின் ஒசாகா தொழிற்சாலையைப் பார்வையிட்டேன்.

ஏற்கனவே கடந்த 2007-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் கோமாட்சு தொழிற்சாலையை அமைச்சராகத் திறந்து வைத்த அதே உணர்வுடன், அந்நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் முதலீடு செய்ய வேண்டும் என்று கோரி, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தேன்.’ என பதிவிட்டுள்ளார். 

Join our channel google news Youtube