நடிகை கௌதமின் கடிதத்தை பார்த்ததும் கடுமையான மனவேதனையாக இருந்தது – வானதி சீனிவாசன்

பாஜகவில் நீண்ட வருடங்களாக பல்வேறு பொறுப்புகளில் இருந்துவந்த நடிகை கௌதமி, அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக பாஜக தலைமைக்கு கடிதம்  எழுதி இருந்தார்.

அவர் அந்த கடிதத்தை உருக்கமாக எழுதியுள்ள  நிலையில்,தனது சொத்துக்களை அபகரித்த அழைக்கப்பன் குறித்தும் அந்த கடிதத்தில் எழுதியிலார்ந்தார். இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் அந்த கடிதத்தில் நான் இன்று இந்த ராஜினாமா கடிதத்தை மிகுந்த வேதனையிலும் வருத்தத்திலும் எழுதுகிறேன்.  எனக்கும் என் குழந்தையின் எதிர்காலத்துக்கும் ஒரு தனிப் பெண்ணாகவும் ஒற்றைப் பெற்றோராகவும் நீதிக்காகப் போராடுகிறேன் என எழுதியிருந்தார்.

பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகியது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன் அவர்கள், கௌதமி மீது பாசம், அன்பு, மரியாதை எனக்கு உண்டு. அவர் காட்சியை அதிகமாக நேசிக்க கூடிய ஒரு பெண்மணி.

அவரை தேசிய மகளிர் அணி இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர் மாநிலத்தில் வேலை செய்வதாக தான் கூறியிருந்தார். நான் ஒரு சினிமா நட்சத்திரம் என்று தனக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைக்காத ஒருவர், நடிகை கௌதமி கட்சியில் இருந்து  விலகுவது வருத்தமளிக்கிறது. நடிகை கௌதமின் கடிதத்தை பார்த்ததும் கடுமையான மனவேதனையாக இருந்தது.

இந்த அரசு கௌதமி கொடுத்த புகார் தொடர்பாக பா.ஜ.க.வில் இருந்ததால் நடவடிக்கை எடுக்காமல் இருந்தார்களா? ஏன் இத்தனைநாள் புகாரை பதிவு செய்யவில்லை. இன்றைக்கு ராஜினாமா செய்தவுடன் புகாரை பதிவு செய்கிறார்கள் என்றால், கட்சியை விட்டு வந்தால் தான் புகாரை பதிவு செய்வோம் என நெருக்கடி கொடுத்தார்களா? என கேள்வி வ்ழுப்பியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.