அவர் ஆர்சிபில இல்லாதது ரொம்ப கஷ்டமா இருக்கு ..! டிவில்லியர்ஸ் மனக்குமுறல் !!

AB de Villiers : ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் பக்கத்தில் சாஹலை பற்றி பேசி இருந்தார்.

தற்போது ராஜஸ்தான் அணியில் சிறப்பாக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல் ஐபிஎல் தொடரின் முதல் பவுலராக 200 விக்கெட்டுகளை எடுத்து புதிதாக ஒரு சாதனையை படைத்தார். ஐபிஎல் தொடரில் முதன் முதலில் 2011-ம் ஆண்டு மும்பை அணிக்காக இவர் அறிமுகமானார் என்பது நமக்கு தெரியும்.

அதன் பின் 2014-ம் ஆண்டு பெங்களூரு அணியில் இடம்பெற்று விளையாடி வந்த அவர் கடந்த 2022-ம் ஆண்டு முதல் தற்போது வரை ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். இந்நிலையில் பெங்களூரு அணியின் முன்னாள் அதிரடி வீரரான டிவில்லியர்ஸ் அவரது யூடுப் சேனலில் சாஹல் மற்றும் ஆர்சிபி அணியை குறித்து பேசி இருந்தார்.

அவர் கூறுகையில், “ஆர்சிபி அணியால் விடுவிக்கப்பட்ட சாஹலை நினைத்து பார்க்கையில் ஒரு ‘ஹார்ட் பிரேக்கிங்’ தருணத்தை தருகிறது. அதே நேரத்தில் அவரது விளையாட்டு ராஜஸ்தான் அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் மிகவும் வலுவாக இருக்கிறது. அவர் ஆர்சிபியிலிருந்து விடுவித்தது ஒரு பைத்தியக்கார தனமாக செயலாக இருக்கிறது.

அவர் 200 விக்கெட்டுகள் எடுத்து இந்த சாதனை படைக்கும் பொழுது ஆர்சிபி அணிக்காக விளையாடாமல் போனது மிகுந்த வருத்தம் அளிக்கிறது”, என்று அவரது யூடுப் சேனல் ஒன்றில் பேசிய பொது அவர் கூறினார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் 13 விக்கெட்டுகள் எடுத்து பர்புள் (Purple) தொப்பி அதாவது அதிக விக்கெட்டுகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.