எம்மாடி எம்மோ! பூஜா ஹெக்டே குடியேற போகும் பங்களா விலை இவ்வளவா? 

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற உள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவில் முகமூடி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. அறிமுகமானது தமிழ் சினிமா என்றாலும் பிரபலமானது தெலுங்கில் தான். தமிழில் பெரிய அளவு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு இருந்தது என்றே கூறலாம்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்த பிறகு அவருக்கு ஹிந்தியிலும் கூட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் வந்தது. கடைசியாக தமிழில் பூஜா ஹெக்டே நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

அப்படி இருந்தும் கூட தமிழில் பூஜா ஹெக்டேவுக்கு அதனை தொடர்ந்து பெரிய அளவில் பட வாய்ப்புகளும் வரவில்லை என்றே கூறலாம். இதனால் மீண்டும் நடிகை பூஜா ஹெக்டே தெலுங்கு பக்கமே சென்றுவிட்டார். இதற்கிடையில் அவர் பிரமாண்ட விலையில் கட்ட பட்ட பங்களா ஒன்றில் குடியேற போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகை பூஜா ஹெக்டே மும்பையின் பாந்த்ராவில் சுமார் ரூ.45 கோடி மதிப்புள்ள மாளிகைக்கு குடியேற இருக்கிறாராம். இது அந்த பகுதியில் இருக்கும் கடல் பகுதியில்  உள்ளது. கிட்டத்தட்ட 400C S.ft பரப்பளவைக் கொண்டுள்ளதாம். ஆனால் பூஜா ஹெக்டே சொந்தமாக வாங்கினாரா? அல்லது வாடகைக்கு இருக்கிறாரா என்பதை அவரே விளக்கம் அளித்தால் தான் தெரியவரும். மேலும், தற்போது இந்தியில் தேவா, ஷங்கி போன்ற படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.