கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!

கீர்த்தி சுரேஷிற்காக கணவனிடம் வாய்ப்பு கேட்ட அட்லீ மனைவி! தோழி மீது ரொம்ப பாசம் தான்!

keerthi suresh Priya Atlee

நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தமிழில் ஜெயம் ரவி நடித்து வரும் சைரன் திரைப்படத்திலும், ரிவால்வர் ரீட்டா என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷிற்கு பெரிதாக பட வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லலாம்.

இந்த நிலையில், கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழியும் அட்லீயின் மனைவியுமான பிரியா கீர்த்தி சுரேஷிற்கு ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்து இருக்கிறாராம். அது வேறு எந்த திரைப்படமும் இல்லை அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆன தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் தான்.

தெறி படம் தமிழில் பெரிய வெற்றியை பதிவு செய்து இருக்கும் நிலையில், அதனுடைய ஹிந்தி ரீமேக்கை எடுக்க திட்டமிடபட்டிருக்கிறதாம். அந்த ஹிந்தி ரீமேக்கில் தமிழில் சமந்தா நடித்த அந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என அட்லீயின் மனைவி பிரியா அட்லீயிடம் பேசி கீர்த்தி சுரேஷிற்கு வாய்ப்பு கொடுக்க சொல்லி இருக்கிறாராம்.

அன்னபூரணி படத்தில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஆனால், இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்குனர் அட்லீ இயக்கவில்லை. ஜீவாவை வைத்து கீ திரைப்படத்தை இயக்கி இருந்தார் காலீஸ் தான் இயக்குகிறாராம். இதற்கான பேச்சுவார்த்தைகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறதாம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், கீர்த்தி சுரேஷ் அட்லீயின் குடும்பத்துடன் நல்ல நட்பில் இருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவருடைய வீட்டிற்கு சென்று அவருடைய மனைவி பிரியாவுடன் நேரத்தை செலவு செய்வது. வெளியில் சுற்றுல்லா சென்று ரீல்ஸ் செய்து அதற்கான வீடியோவைவும் வெளியிடுவதை பார்த்திருப்போம். எனவே, கீர்த்திக்காக அட்லீயும் ஹிந்தி ரீமேக்கில் அவரை நடிக்க வைக்க படக்குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

Join our channel google news Youtube