சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

சைலண்டாக நடைபெறப்போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணம்! வருகை தருவாரா அஜித்?

adhik ravichandran and ajithkumar

தமிழ் சினிமாவில் த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா, மார்க் ஆண்டனி படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் கடைசியாக விஷால் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோரை வைத்து எடுத்திருந்த மார்க் ஆண்டனி படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப்பெற்று இருந்தது.

அந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தை வைத்து அவருடைய 63-வது படமான AK63 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட அஜித்தின் நெருங்கிய சினிமா வட்டாரத்தில் இந்த தகவல் உறுதியானது என்றே சொல்கிறார்கள். விரைவில் இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நான் பெற விரும்புவது யாசகம் அல்ல என்னுடைய உரிமையை! இயக்குனர் அமீர் அறிக்கை!

அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை போலவே அவருக்கு திருமணம் செய்து கொள்ளும் காலமும் கூடி வந்துள்ளது. அவர் நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யா பிரபுவை காதலித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாக நண்பர்களாக பழகி வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர் இருவரும் திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார்களாம்.

இவர்களுடைய திருமணம் வருகின்ற டிசம்பர் மாதம் பெற்றோர்கள் முன்னிலையில், நடைபெறவுள்ளதாகவும் முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ஆதிக் ரவிச்சந்திரனுடைய திருமணம் மிகவும் சைலண்டாக நடைபெறவிருக்கிறதாம். பெரிய அளவில் பிரமாண்டமாக நடத்தவேண்டாம் என்று முடிவு எடுத்து இருக்கிறார்களாம்.

கிட்டத்தட்ட இவர்கள் தங்களுடைய திருமணத்திற்கு 300 பேரை மட்டும் தான் அழைக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். தங்களுக்கு நெருக்கமான சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் வாதிகள் என தங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டும் தான் அழைக்கவிருக்கிறார்களாம். அஜித்குமாரின் அடுத்த படத்தை ஆதிக் ரவிசந்திரன் தான் இயக்கவுள்ளார். எனவே, அவருடைய திருமணத்திற்கு அஜித்தையும் அழைக்கவுள்ளார்களாம். அவர் வருவாரா இல்லையா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

 

Join our channel google news Youtube