,
appavu

எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல – சபாநாயகர் அப்பாவு

By

2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்த போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார் என சபாநாயகர் அப்பாவு பேட்டி. 

சபாநாயகர் அப்பாவு நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில்
இருக்கிறார்; அவர் குற்றவாளி அல்ல. ஆளுநர் வெளிப்படையாக அரசியல் செய்கிறார்; குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தான் அமைச்சரவையில் இருந்து நீக்க முடியும்.

முதல்வர் சொல்லியோ அல்லது செந்தில்பாலாஜி தாமாகவோ பதவி விலகலாம், இதில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. கடந்த ஆண்டுகளில் பல அமைச்சர்கள் இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்த வரலாறு உள்ளது. 2010ம் ஆண்டு அமித்ஷா சிறையில் இருந்த போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.

அமித்ஷா வருகையின் போது மின் தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர் எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என தெரிவித்துள்ளார்.