விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை – முதலமைச்சர் பழனிசாமி கருத்து

விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை – முதலமைச்சர் பழனிசாமி கருத்து

நடிகர் விஜய் கட்சி தொடங்குகிறார் என்ற தகவல் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி தொடங்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்  விண்ணப்பத்தில், கட்சி தலைவராக பத்மநாபன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் ஷோபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது .இதனையடுத்து, இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இது தொடர்பாக விஜயின் செய்தி தொடர்பாளரான ரியாஸ் அகமது மறுப்பு தெரிவித்து தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,விஜய் கட்சி தொடங்குவது அவரின் உரிமை. இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube