வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் தெரியுமா?

சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான திரைப்படம் வடக்குப்பட்டி ராமசாமி. இந்த திரைப்படத்தில் மேகா ஆகாஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், மாறன், தமிழ், ரவிமரியா, சேசு, ஜான் விஜய், கூல் சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து இருந்தார்கள்.

காமெடி கதையம்சம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று இன்னும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. படத்தின் ட்ரைலர் எல்லாம் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சிரிப்பை உண்டாக்கி இருந்தது.

கல்கி கி.பி 2898 படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளம்? மிரண்டு போன பாலிவுட்!!

எனவே, ட்ரைலரில் வந்த காட்சிகள் எல்லாம் படத்தில் இருக்குமா என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் படத்திற்கு சென்ற நிலையில், ட்ரைலரை விட படத்தில் பல காமெடியான காட்சிகள் இருந்ததால் படத்தை மக்கள் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் சென்று ரசித்து வருகிறார்கள். வசூல் ரீதியாகவும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது.

இந்நிலையில், படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். அவர்களுக்காகவே சூப்பரான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அது என்னவென்றால், வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் ஓடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கி இருக்கிறதாம். அதன்படி, அடுத்த மாதம் (மார்ச்) மாதம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment