தெற்கு காசாவில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்..!

தெற்கு காசாவில் 3 வீரர்கள் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல்..!

South Gaza

இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இருப்பினும் இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி திடீரென தாக்குதல் நடத்தியது. இதனால் இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே 4-மாதத்திற்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.

இந்த சண்டையில் இதுவரை சுமார் 26,000-க்கும் மேற்பட்டோர்  உயிரிழந்துள்ளனர், அதே நேரத்தில் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கும் போராடி வருகின்றனர். இந்த உயிரிழப்புகளில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், ஹமாஸுக்கு எதிரான தரைவழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை 232 ஆக உயர்ந்துள்ளது. தெற்கு காசா பகுதியில் நேற்று நடந்த சண்டையின் போது கொல்லப்பட்ட இஸ்ரேல் மூத்த இராணுவ  அதிகாரி உட்பட மூன்று பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததை இஸ்ரேல் இராணுவம்  உறுதி செய்துள்ளது.

 

Join our channel google news Youtube