வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஆலியா மானசா கதறி அழுததற்கு காரணம் இதுதானா?

வளைகாப்பு நிகழ்ச்சியின்போது ஆலியா மானசா கதறி அழுததற்கு காரணம் இதுதானா?

Default Image

ஆலியா மானசா மட்டும் சஞ்சீவ் கார்த்தி இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா-ராணி-சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். இவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சிக்குப் பின் காதலித்து வந்த நிலையில், கடந்த வருடம்  இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணம் ரகசியமாக நடைபெற்ற நிலையில், வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சஞ்சீவ் கார்த்தியின் பெற்றோர் கடந்து வந்த நிலையில், ஆலியா மானசா பெற்றோர்கள் கலந்து கொள்ளவில்லை. இது அவருக்கு வேதனை அளித்தாலும் பல வருடங்களாக தனது பெற்றோருடன் பேசாதது வருத்தமாகவே இருந்தது.

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற டான்சிங்சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்ற நிலையில்,  விஜய் தொலைக்காட்சி இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி உள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் ஆலியா மானசாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஆலியா, கண்ணீர் விட்டு அழுகிறார்.

Join our channel google news Youtube