31.7 C
Chennai
Friday, June 2, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

கீர்த்தி சுரேஷின் வருங்கால கணவர் இவரா..? அவரே சொன்ன அசத்தல் பதில்.!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டேட்டிங் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண வதந்திகள் பற்றி அடிக்கடி சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுவது வழக்கமான ஒன்று. அதற்கு அவரும் விளக்கம் கொடுத்து விடுவார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட கீர்த்தி சுரேஷ் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

Keerthy Suresh
Keerthy Suresh [Image Source : Instagram/@Keerthy Suresh
]

ஆனால், இந்த தகவல் எதுவும் உண்மை இல்லை தனக்குத் திருமணம் நடைபெறும்போது  அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என விளக்கம் கொடுத்திருந்தார். அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தனது நண்பர் ஒருவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

Keerthy Suresh boyfriend
Keerthy Suresh boyfriend [Imagesource : indiatoday.]

அந்த புகைப்படங்களை பார்த்தார்கள் நெட்டிசன்கள்  பலரும் கீர்த்தி சுரேஷ் அவரும் காதலித்து வருவதாகவும் இவர்தான் கீர்த்தி சுரேஷ் நீண்ட நாள் காதலர் எனவும்,  இருவரும் டேட்டிங் செய்து வருகிறார்கள். எனவும் தகவல்களை பரப்பினர் இந்த நிலையில் இதற்கும் தற்பொழுது நடிகை கீர்த்தி சுரேஷ் விளக்கம் அளித்து தனது டிவிட்டர்  பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.

அதில் ” அது என்னுடைய வருங்கால கணவர் இல்லை. அவர் எனக்கு நெருங்கிய நண்பர்.உண்மையான மர்ம மனிதனை நான் எப்போது வேண்டுமானாலும் வெளிப்படுத்துவேன்” என நக்கலாக பதிவிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.