சென்னையில் சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா? விளக்கமளிக்கும் அமைச்சர்

சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ஒரே நாளில் 1,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 25,937 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 260 பேர் உயிரிழந்தது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்து வருகிறது. 

இந்நிலையில், சென்னையில் கொரோனா தொற்று சமூக பரவல் ஏற்பட்டுள்ளதா என்பதை மத்திய அரசு தான் அறிவிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை என தெரிவித்த அவர், கொரோனா நோயாளிகளை கவனமுடன் அரசு கையாண்டு வருகிறது எனவும் கூறினார்.