Brother : போஸ்டர் மட்டும் தான் காப்பியா இல்ல கதையுமா? ஜெயம் ரவியின் புதுப்படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

By

ஜெயம் ரவி நடித்துள்ள இறைவன் திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அவர் அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்கான தலைப்பு மற்றும் படப்பிடிப்பு தொடங்கியதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜெயம் ரவி நடிக்கும் 30 வது படத்திற்கு ‘பிரதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த  திரைப்படத்தை ஜீவை வைத்து ‘சிவா மனசுல சக்தி’, உதயநிதி ஸ்டாலினை வைத்து ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்களை இயக்கிய  பிரபல இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இளம் நடிகையாக வளம் வரும் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கஉள்ளார்.

இந்த ‘பிரதர்’ திரைப்படத்திற்கு இதுவரை ஜெயம் ரவிக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இசையமைக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லூக் போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் “பிரெத் ஆப் டெஸ்டினி’ என்ற சீன வெப் சீரிஸின் போஸ்டரில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

Brother
Brother [File Image]

“பிரெத் ஆப் டெஸ்டினி’ போஸ்டரும் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’  திரைப்படத்தின் போஸ்டரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருப்பதால் பலரும் போஸ்டர் கூடவா காப்பி? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும்,  இந்த திரைப்படம் ரீமேக் திரைப்படமா அல்லது இல்லன்னா போஸ்டர், கதை ரெண்டையும் சுட்டுட்டீங்களா? எனவும் சினிமா விமசகர் ப்ளூ சட்டைமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Breath of Destiny
Breath of Destiny [File Image]

“பிரெத் ஆப் டெஸ்டினி’ ஒரு 40-எபிசோட் சி-டிராமா தொற்றுநோய்களின் போது  ஓடிடியில் ஓடியது.அவசர மருத்துவ பணியாளர்கள் குழு பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட தீவுக்கு  எப்படி செல்கிறார்கள், பரபரப்பான நகரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிற்கு சென்று அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.