பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கிறாரா சின்னத்திரை நடிகை சரண்யா.?அவரே கூறிய பதில்.!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நடிக்கிறாரா சின்னத்திரை நடிகை சரண்யா.?அவரே கூறிய பதில்.!

Default Image

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக நான்  நடிக்கவுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று சின்னத்திரை நடிகை சரண்யா தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் பிரபலமான சின்னத்திரை நடிகை சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்கள் மத்தியிலும் , சின்னத்திரை நடிகர்களிடையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சீரியலை பல ரசிகர்கள் சித்ராவிற்காவே பார்த்து வந்தனர் .ஆனால் தற்போது அவர் இல்லை .எனவே முல்லை கதாபாத்திரத்தில் அடுத்ததாக நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது . சித்ராவிற்காக பார்த்து வந்த ரசிகர்கள் இனி தொடரை சித்ராவிற்கு பதிலாக யார் வந்தாலும் பார்க்க மாட்டோம் என்று கூறி வருகின்றனர் .சித்ராவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றாலும் முல்லை கதாபாத்திரத்தில் ஒரு நடிகையை நடித்து வைத்து தான் ஆக வேண்டும் என்பதால் முல்லை கதாபாத்திரத்திற்கு மாற்று நடிகையை படக்குழுவினர் தேடி வருகின்றனர்.ஏனெனில் இப்போது தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.எனவே அதனை நிறுத்தி விட முடியாது என்பதால் பிரபல நடிகையை நடிக்க வைக்க படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் முல்லை கதாபாத்திரத்திற்கு பிரபல சின்னத்திரை நடிகையும், சித்ராவின் தோழியுமான சரண்யா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கமளித்த சரண்யா , பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்ரா நடித்த முல்லை கதாபாத்திரத்தில் அவருக்கு பதிலாக நான் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.அது உண்மையில்லை.முல்லை என்ற கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் நினைவில் என்றென்றும் இருக்கும் சித்ராவின் அந்த கதாபாத்திரத்தை யாராலும் நிரப்ப விட முடியாது.முல்லை என்றாலே அது சித்ரா மட்டும் தான் .நான் அதை மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் . இதிலிருந்து அவர் முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

 

Join our channel google news Youtube