போணியாகாத ஜான்சன்,ஹசல் வூட் !சஹாலை ரூ.6 கோடிக்கு ஏலம் ….

போணியாகாத ஜான்சன்,ஹசல் வூட் !சஹாலை ரூ.6 கோடிக்கு ஏலம் ….

Default Image

ஐபில் 2018ஆம் ஆண்டுக்கான ஏலம் பெங்களூருவின் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்திய டெஸ்ட் வீரர் ராகுலை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது .பியூஷ் சாவ்லாவை ரூ.4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எடுத்தது .
யூசுவெந்திர சஹாலை ரூ.6 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது பெங்களூரு அணி.

ஐபிஎல் 2018 தொடருக்கான ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுற்றில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் ஏலம் போகவில்லை.
மிட்செல் ஜான்சனின் அடிப்படை விலை ரூ.2 கோடி. மும்பை இவருக்கான ரைட் டு மேட்ச் கார்டு வைத்திருந்தது. ஆனால் மும்பையும் இவரைக் கைவிட மற்றவர்களும் ஜான்சனை ஏலம் எடுக்க முடிவெடுக்கவில்லை, ஒருவேளை பிற்பாடு யாராவது எடுக்க வாய்ப்புள்ளது.
Image result for mitchell johnson
ஆனால் ஜோஷ் ஹேசில்வுட் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் இவரது அடிப்படை விலையும் ரூ.2 கோடிதான். ஆனால் இவர் இதுவரை ஐபிஎல் ஆடியதில்லை, எனினும் எந்த அணி உரிமையாளரும் ஜோஷ் ஹேசில்வுட்டை ஏலம் எடுக்கவில்லை. இது உண்மையில் ஆச்சரியமாகவே பார்க்கப்படும்.மேற்கிந்திய வீரர் சாமுவேல் பத்ரி, ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஷம்பா ஏலம் போகவில்லை…
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …
Join our channel google news Youtube