மிரட்டலாக வெளிவர காத்திருக்கும் ஐபோன் 16 சீரிஸ்… எதிர்பார்ப்பில் ஆப்பிள் ரசிகர்கள்!

IPHONE 16 SERIES : உலக அளவில் ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் ஆப்பிள், தனது அடுத்த தயாரிப்பான ஐபோன் 16 சீரிஸை விரைவில் வெளியிட உள்ளதால் அதன் மீதான எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் கடைசியாக தனது மிரட்டலான ஐபோன் 15 சீரிஸை கடந்தாண்டு செப்டம்பரில் சர்வதேச அளவில் அறிமுகம் செய்திருந்தது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் மொபைலானது டைட்டனியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட முதல் ஐபோன் ஸ்மார்ட்போன் என்பதால், நல்ல வரவேற்பை பெற்றது.

Read More – 100 மணிநேர பேட்டரி பேக்கப்.. அசத்தலான ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்தது OnePlus!

இருப்பினும், ஒருசில கலவையான விமர்சனத்தையும் பெற்றாலும் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் உலகளாவிய சந்தையில் ஐபோன் 15 சீரிஸ் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஆப்பிள் ரசிகர்கள் இப்போது வரவிருக்கும் ஐபோன் 16 சீரிஸ்-காக பல்வேறு அம்சங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஐபோன் 16 சீரிஸ் வரும் செப்டம்பரில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 சீரிஸில் சில குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் மற்றும் பிரீமியம் வாய்ந்த வடிவமைப்பு, iOS அனுபவத்தில் இருக்கும் என கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கலாம் என்றும் அதே நேரத்தில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

Read More – Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்!

இதுபோன்று, இரண்டு போன்களிலும் A18 Pro Bionic சிப் மற்றும் 48MP Sony IMX903 முதன்மை கேமரா கொடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில் குறிப்பாக ஐபோன் 16 சீரிஸில் நீருக்கடியில் பயன்படுத்தும் “Underwater Mode” அம்சத்தை கொண்டு வரும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய அம்சத்தின் மூலம் நீருக்கடியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எளிதாக எடுக்கலாம்.

மேலும், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸில் கேமரா செயல்திறன், பேட்டரி மற்றும் வெப்ப செயல்திறனை மேம்படுத்துவதில், வடிவமைப்பு என பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், AI கம்ப்யூட்டிங் கோர்களுடன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் வேகமான செயலியை கொண்டிருக்கும் எனவும் தகவல் கசிந்துள்ளது.

Read More – ஆப்பிளை தூக்கி சாப்பிட்ட Honor Magic 6 Pro… உலக சந்தையில் அறிமுகம்!

இது சிறந்த செயல்திறனை வழங்கும் என்றும் மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெறும் எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆப்பிள் ரசிகர்கள், இந்த போன் வெளியிடுக்காக காத்திருக்கின்றனர். அதன்படி, ஐபோன் 16 சீரிஸ் மிரட்டலாக விரைவில் வெளிவரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment