உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் வெளியேறியதால் இன்சமாம் உல் ஹக் பதவி விலகல் !

பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இருந்த இன்சமாம் உல் ஹக் பதவி விலகினார்.இவர் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தான் அணியின் தேர்வு குழு தலைவராக இன்சமாம் உல் ஹக் பதவி ஏற்றார்.

இவர் பதவி காலம் இம்மாதம்  31-ம் தேதி உடன் முடிய இருந்த நிலையில் தற்போது அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து விலகி உள்ளார்.இந்நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி விளையாடிய 8 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றியும் , 3 போட்டியில் தோல்வியும் அடைந்து உள்ளது.

இதன் மூலம் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி ஐந்தாவது இடத்தை பிடித்து அரையிறுதி செல்ல வாய்ப்பை இழந்து உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. உலகக்கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் வெளியேறியதால் தான் அணி தேர்வு குழு தலைவர் பதவியில் இருந்து இன்சமாம் உல் ஹக் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan