இடைநிற்றல் விவகாரம் :மத்திய அரசின் புள்ளிவிவரம்  தவறாக இருக்கிறதா? தங்கம் தென்னரசு கேள்வி

  இடைநிற்றல் விவரத்தில் மட்டும் மத்திய அரசின் புள்ளிவிவரம்  தவறாக இருக்கிறதா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.   

பட்ஜெட்டை துணை முதலமைச்சரும் ,நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பின்னர் தமிழக சட்டப்பேரவையை பிப்ரவரி 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால்.17-ஆம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.அதன்படி 17-ஆம் தேதி முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று பள்ளி இடைநிற்றல் விவகாரம் தொடர்பாக திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழக அரசுக்கு விருது வழங்கும்போது சரியாக இருந்த மத்திய அரசின் புள்ளிவிவரம், இடைநிற்றல் விவரத்தில் மட்டும் தவறாக இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பினார்.  

இதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், தமிழக அரசின் புள்ளிவிவரம் சரியானது, மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தான் வேறாக உள்ளது என்று   பதில் அளித்துள்ளார்.