#INDvAUS : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்திய அணி..!

ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறை முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.

இதைத்தொடர்ந்து, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியானது இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் இந்திய அணி சூரியகுமார் தலைமையிலும், அதேபோல ஆஸ்திரேலியா அணி மேத்யூ வெயிட் தலைமையில் களமிறங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி:

மேத்யூ ஷார்ட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட்(கேப்டன் /விக்கெட் கீப்பர்), சீன் அபோட், நாதன் எல்லிஸ், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், தன்வீர் சங்கா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய அணி : 

ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா
ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.