விறுவிறு படப்பிடிப்பில் இந்தியன்2′ படக்குழுவுக்கு கரரார் கன்டிசன்..! இயக்குநர் அதிரடி

  • இந்தியன்2 படபிடிப்பு வேகமெடுத்துள்ள நிலையில் படக்குழுவினர் செல்போனை பயன்படுத்த கூடாது என்று ஸ்டிட் கன்டிசன்களை இயக்குநர் சங்கர் போட்டுள்ளார்
  • படத்தை2021க்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் சங்கர் இயக்கத்தில் இந்தியன்  படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது இதனை அடுத்து நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கமல்-சங்கர் இருவரும் இந்தியன்2 வில் இணைந்துள்ளனர். இந்தியன் படத்தில் எப்படி நடிகர் கமல் மற்றும் நடிகை சுகன்யா ஆகிய இருவருடைய காட்சிகள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றதோ அந்த அளவிற்கு இந்தியன் 2 வில் நடிகை காஜல் அகர்வால் காட்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை உள்ளது என்று ப்டக்குழு தெரிவிக்கின்றனர்.

பிரம்மாண்டம் என்ற பெயருக்கு சொந்தக்காரர் என்றால் அது இயக்குநர் சங்கர் தான் படத்தில் நடிகர் கமல் மற்றும் காஜல் அகர்வாலின் எந்தவொரு லுக்கும் எக்காரணத்தைக் கொண்டும் வெளியே தெரியக்கூடாது என்று முடிவு செய்துள்ளார். இதனால் எக்காரணத்தை கொண்டும்  மொபைல் போன் யாருக்கும்  அரங்கினுள் அனுமதி கிடையாது அதை கொண்டு வரக்கூடாது என்ற உத்தரவையும் படக்குழுவினருக்குப் பிறப்பித்துள்ளார்.

படத்தில் நடிகர் கமல் நடிகை காஜல் அகர்வால் ஆகிய இருவரின் காட்சிகளின் லுக் ஆனது பார்வையாளர்களுக்குப் பிரமிப்பை உண்டாக்கின்ற  வகையில் இயக்குநர் வடிவமைத்து உள்ளார் என்கிறது படக்குழு.படம் தொடர்ந்து  அக்டோபர் மாதம் வரை நடைபெறவுள்ளதும் தெளிவாகி உள்ளது.படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் எல்லாம் தற்பொழுதே பல்வேறு நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் 2021 பொங்கல் வெளியீடாக திரைக்கு வர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

author avatar
kavitha