இந்திய கடற்படை மாலுமி கப்பலில் இருந்து மாயம்! தொடரும் தீவிர தேடுதல் வேட்டை

Indian Navy: இந்திய கடற்படையின் மாலுமி, கப்பலில் இருந்து கடந்த மாதம் 27ஆம் தேதி காணாமல் போன நிலையில் அவரை தேடும் பணி தற்போது தீவிரமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மும்பையை தலைமையிடமாகக் கொண்ட Western Naval Command வெளியிட்டுள்ள தகவலின்படி மாயமான மாலுமி சாஹில் வர்மா என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை இந்திய கடற்படையினர் கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலம் தேடி வருகின்றனர்.

Read More – 14 பேர் உயிரை பலி கொண்ட ஆந்திர ரயில் விபத்து..! ஓட்டுநர்கள் கிரிக்கெட் பார்த்ததே காரணம்.. பகீர் தகவல்

இது தொடர்பில் Western Naval Command வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், பிப்ரவரி 27ஆம் தேதி இந்திய கடற்படைக் கப்பலில் இருந்து சாஹில் வர்மா என்ற மாலுமி காணாமல் போயுள்ளார். கடற்படையினர் உடனடியாக கப்பல்கள் மற்றும் விமானங்களைக் கொண்டு பாரிய தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கி தீவிரமாக ஈடுபட்டுள்ளனர், இது தொடர்பில் விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என கூறப்பட்டுள்ளது.

இது குறித்து காணாமல் போயுள்ள மாலுமி சாஹில் வர்மாவின் தந்தை சுபாஷ் சந்தர் கூறும்போது, “கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி அன்று கப்பல் கேப்டனிடமிருந்து ஒரு போன் அழைப்பு வந்தது, அதில் தான் என் மகன் மாயமானது பற்றி என்னிடம் தெரிவிக்கப்பட்டது, அவரை தேடும் நடவடிக்கை தொடர்ந்து வருவதாக என்னிடம் தெரிவித்தனர்” என கூறினார்.

Leave a Comment