பிறந்தநாள் பார்ட்டியில் தயாரிப்பாளர் கலந்துகொள்ளவில்லையா?! அப்போ இந்தியன்-2 அவ்வளோதானா?!

உலகநாயகனின் பிறந்தநாள் பார்ட்டியில் இந்தியன்-2 தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்துகொள்ளவில்லையாம்.

இம்மாதம் 7ஆம் தேதியன்று உலகநாயகன் கமல்ஹாசன் தனது 67வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார். இந்த மழை மட்டும் பெய்யாது இருந்திருந்தால் அவரது ரசிகர்கள் இன்னும் சிறப்பானதாக இந்த பிறந்தநாளை கொண்டாடி இருப்பர். இருந்தும் பல்வேறு இடங்களில் உலகநாயகனின் பிறந்தநாள் நன்றாக கொண்டாடப்பட்டது.

சினிமா பிரபலங்கள் தங்கள் பிறந்தநாளுக்கு தங்கள் நண்பர்கள், வேண்டியவர்களுக்கு பார்ட்டி வைப்பதுண்டு. அதே போல உலகநாயகனின் பிறந்தநாளுக்கும் பார்ட்டி வைக்கப்பட்டதாம். அதற்கு பல திரைபிரபலன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாம். அந்த அழைப்பில், இந்தியன் 2 தயாரிப்பாளர் சுபாஷ்கரனும் அடக்கம்.

ஆனால், மதுரை வரை வந்த சுபாஷ்கரன் எதோ சில காரணங்களால், பார்ட்டியில் கலந்துகொள்ளாமல், லண்டன் புறப்பட்டு சென்றுவிட்டாராம். முக்கியமான வேலை இருந்திருக்கும் என சிலர் கூறினாலும், ஒரு சிலர், என்னதான் முக்கிய வேலையாக இருந்தாலும் தன் பட முன்னணி ஹீரோ அதுவும் உலகநாயகன் கூப்பிட்டும் வரவில்லையே என வருத்தத்தில் உள்ளனராம்.

இந்தியன்-2வில் ஏற்பட்ட பிரச்சனைகள், இன்னும் தீர்வு காணப்படாமல், எப்போது ஆரம்பிக்கும் என தெரியாமல் அந்த மன கசப்பில் தான் சுபாஷ்கரன் இந்த பார்ட்டியில் கலந்துகொள்ளவில்லை என கூறிவிட்டு செல்கின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.