வலிமை முதல் பாடல்.! யார் குரலில்..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!

வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் வரிகள் lyrics video இன்று இரவு வெளியாகும் என தகவல்.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார். தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான இறுதி கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளது. படத்திலிருந்து வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல சாதனைகளை படைத்தது வருகிறது.

அடுத்ததாக வலிமை திரைப்படத்தின் முதல் பாடல் வரிகள் இன்று இரவு 10.30 மணிக்கு வெளியாகிறது. படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைத்துள்ளார். மேலும் இன்று வெளியாகும் வலிமை முதல் பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். ஆனால், இந்த பாடலை யார் பாடியுள்ளார் என்று ரசிகர்களுக்கு மத்தியில் கேள்விகள் எழும்பியுள்ளது. அந்த வகையில், ஒரு பக்கம் இந்த பாடலை அனிருத் பாடியுள்ளதாகவும்,மற்றோரு பக்கம் யுவன் ஷங்கர் ராஜா படியுள்ளதாவும் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. பொறுத்திருந்து இந்த பாடலை யார் பாடியுள்ளார் என்பதை பார்ப்போம்.

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும், கார்த்திகேயா, புகழ், அச்சியுத் குமார், யோகி பாபு, சுமித்ரா, ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.