தமிழகத்தில் மட்டும் கேஜிஎப்-2 இத்தனை கோடி வசூலா.?!

இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் அதிரடி ஆக்சன் திரைப்படம் “கேஜிஎப் 2”.  முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்திற்கு அதிக வரவேற்புகள் கிடைத்துள்ளது என்றே கூறவேண்டும்.

பலத்த எதிர் பரப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் கடந்த 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படம் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்டது.தமிழகத்தில் மட்டும் இந்த படம் 400 திரையரங்குகளில்  ஓடிகொண்டிருக்கிறது.

இதுவரை மொத்தமாக உலகம் முழுவதும் இந்தப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் 1000 கோடி வசூல் செய்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மட்டும் இந்த படம் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, இந்த படம் வெளியான 12 நாட்களில் 75 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருப்பதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை பிரசாந்த் நீல் இயக்க, யாஷ் உடன்  படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ் மற்றும் பல பிரபல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.