31.1 C
Chennai
Monday, May 29, 2023

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையல்ல..! இந்திய கால்பந்து அணியின் கேப்டன் ட்வீட்..!

மல்யுத்த வீரர்களை இழுத்துச் செல்வது முறையானது அல்ல என்று...

ஐபிஎல் இறுதிப்போட்டியில் மழை வருமா? வானிலை நிலவரம் என்ன?

ஐபிஎல் பைனலில் ரிசர்வ் டேயில் மழை வருவதற்கான வாய்ப்பு...

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறப்பு!

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை...

இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா…20 பேர் பலி.!!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,720 பேருக்கு கொரோனா தோற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 3,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 3,325 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 3,720 பேருக்கு தொற்று உறுதியானது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,52,996-லிருந்து 4,49,56,716 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு என்ணிக்கை 5,31,564-லிருந்து 5,31,584 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 7,698 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,43,84,955-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 44,175-லிருந்து 40,177 ஆக குறைந்துள்ளது.