இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா…15 பேர் பலி.!!

இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா…15 பேர் பலி.!!

coronavirus india

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. தற்பொழுது, இந்தியாவில் ஒரே நாளில் 1,331 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று 1,839 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 1,331 பேருக்கு தொற்று உறுதியானது.  இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,69,630-லிருந்து 4,49,72,800 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு என்ணிக்கை 5,31,692 லிருந்து 5,31,707 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த இரண்டு தினங்களாக உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு இன்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 25,178 லிருந்து 22,742ஆக குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube