30.5 C
Chennai
Saturday, June 10, 2023

மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் பணியிடைநீக்கம்… பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.!

தமிழகப்பள்ளி மாணவர்கள் தேசிய விளையாட்டுப்போட்டிகளுக்கு கலந்து கொள்ளாத விவகாரத்தில்...

புதுச்சேரி காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் நியமனம்… கார்கே.!

புதுச்சேரிக்கு காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த...

இனிமேல் பக்காவான ரைடு..அறிமுகமானது ‘ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட்’..! விலை எவ்வளவு தெரியுமா..!

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம், ஹோண்டா டியோ எச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை...

உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் – அண்ணாமலை

உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று என முதல்வருக்கு அண்ணாமலை வேண்டுகோள். 

போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகார் தொடர்பாக, மீண்டும் விசாரணையை தொடர்ந்து நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தேவைப்பட்டால் சிறப்பு விசாரணைக் குழு அமைத்து, மத்திய குற்றப்பிரிவு தொடர்ந்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், ‘தமிழக அமைச்சராக இருக்கும் திரு செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக, திரு செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்.’ என தெரிவித்துள்ளார்.