ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

ஓட்ஸை இப்படி சாப்பிட்டால் மிக வேகமாக எடை குறையுமாம்! உங்களுக்கு தெரியுமா?

Default Image

இந்தியர்கள் அதிகமாக முதலில் காலை உணவுக்கு இட்லி, தோசை மற்றும் இடியாப்பம் என மிகவும் நார்மலான இந்த உணவுகளை தான் எடுத்துக்கொண்டிருந்தனர். தற்போதைய நவீன காலகட்டத்தில் அவைகள் எல்லாம் மாறிவிட்டது என்பது நமக்கு தெரிந்த விஷயம். இட்லி தோசைக்கு பதிலாக தற்போது ஓட்ஸ், கார்ன் பிளேக்ஸ், பிரெட் டோஸ்ட் என சில சாப்பாடுகள் வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த ஓட்ஸ் உடல் எடையை குறைக்கும் என கூறுவதால் பலரும் அதை அப்படியே வாங்கி சூடான பாலை ஊற்றி சாப்பிடுகிறார்கள். ஆனால், அப்படி சாப்பிடும் ஓட்ஸை விட இரவு முழுவதும் நீர் அல்லது பாலில் ஊறவைத்து சாப்பிடும் ஓட்ஸ் நமது உடல் எடை விரைவில் குறைய வலி செய்கிறது. ஒரு இரவு முழுவதும் ஊறவைக்கப்பட்ட ஓட்ஸ் மென்மையாக இருப்பதால் காலையில் உட்கொள்வது மிகவும் எளிதாக இருக்கும்.

அதுமட்டுமில்லாமல், பல உணவுகளை நெருப்பில் வைத்து சமைப்பதால் அவற்றில் உள்ள பல ஊட்டச்சத்துகள் அழிக்கப்படுகின்றன. இரவு முழுவதும் ஊற வைக்கப்படுவதனால் ஓட்ஸ் மற்றும் அது ஊற வைக்கப்படும் திரவம் ஆகிய இரண்டிலும் உள்ள ஊட்டச்சத்துகள் பாதுகாப்பாக சேமிக்கப்படுகின்றன. நீண்ட நேரம் ஈரமாக இருப்பதால் ஓட்ஸில் உள்ள ஸ்டார்ச் உடைக்கப்பட்டு ஓட்ஸில் உள்ள அசிட்டிக் அமிலம் குறைக்கப்படுகிறது. இதனால் ஓட்ஸ் எளிதில் ஜீரணமாகிறது. இதனால் ஓட்ஸை இப்படி சாப்பிடுவதால் நமக்கு விரைவில் பலன் அளிக்கும்.

,

Join our channel google news Youtube