சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்றால் இதை பண்ணுங்க

சாப்பிட்ட உணவு செரிக்கவில்லை என்றால் இதை பண்ணுங்க

Default Image

சாப்பிட்ட உணவு சேர்ப்பதற்கான வழிமுறைகள். 

இந்த நாகரீகமான உலகில் நாம் உணவு, உடை, நடை என அனைத்திலும் நாகரீகமாக இருக்க வேண்டும் என விரும்புவதுண்டு. இன்று நமது முன்னோர்களுடைய அணைத்து உணவு கலாச்சாரங்களையும் நாம் மறந்து விடுகிறோம்.

நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சார உணவு முறைகள் அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளது. இன்று, அனைவரும் மேலை நாட்டு உணவுகளான பாஸ்ட் புட் உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவதுண்டு.

இந்த உணவுகள் நமது உடலுக்கு ஆரோக்கிய கேடுகளை உண்டு பண்ணுவதுடன், நமது ஆயுசு நாட்களையும் குறைத்து விடுகிறது. இன்று உடல்  அதிகரிப்பு, மாரடைப்பு மேலும் பல உயிர்க்கொல்லி நோய்களையும் ஏற்படுத்துகிறது.

தற்போது இந்த பதிவில், நாம் சாப்பிடும் உணவுகள் செரிக்காத பட்சத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.

சீரக தண்ணீர்

நாம் சாப்பிட்ட பின் உணவுகள் செரிக்காமல், வயிறு மந்தமான நிலையில் காணப்பட்டால், சிறிதளவு சீரக தண்ணீர் குடித்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கி, சுயகமடையலாம்.

நடைப்பயிற்சி

செரிமான பிரச்னை உள்ளவர்கள், நடைப்பயிற்சி மேற்கொண்டாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நடைப்பயிற்சி செய்வதால் நமது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், அசைவு பெற்று, தேங்கி இருக்கும் கொழுப்புகளை கரைத்து, உடல் எடை அதிகரிப்பையும் தடுக்கிறது.

Join our channel google news Youtube