பாஜக ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் – சிதம்பரம்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைக்கேடு வழக்கில் சுமார் 106 நாட்களாக சிறையில் இருந்த நிலையில் வெளியே வந்தார் சிதம்பரம். இந்தநிலையில் நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  பொருளாதார நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி அமைதியாகவே இருக்கிறார்.பொருளாதார சரிவை பாஜக அரசு தவறாக மதிப்பிட்டுள்ளது .பொருளாதார வளர்ச்சி பின்னடைவு காரணத்தை அரசால் கணிக்க முடியவில்லை.

ஜம்மு காஷ்மீரில் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பது வேதனை தருகிறது .அங்குள்ள  மக்களின் சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது.பொருளாதாரத்தை நிர்வகிக்க திறனற்ற அரசாக திகழ்கிறது பாஜக. மத்தியில் பாஜக ஆட்சி வந்தபிறகு மக்களின் வறுமை மிகவும் அதிகரித்துவிட்டது.நடப்பு நிதியாண்டில் 5% வளர்ச்சி அடைந்தாலே அதிசயம். பொருளாதார பின்னடைவை சரிசெய்ய எந்தவித நடவடிக்கையும் பாஜக அரசு எடுக்கவில்லை.பாஜக தலைமையிலான ஆட்சி தொடர்ந்தால் கடவுள்தான் நாட்டை காப்பாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.