கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம்- ஜி.கே.வாசன்

கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் தற்போதே பரபரப்பாகியுள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது.தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும் ,கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் அறிவித்து வருகின்றன.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் இப்போதே அதிகம் பேசப்பட்டு வருகின்றது.மேலும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக தற்போதைய முதலமைச்சர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் த.மா.கா.  தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்தால் அதிமுக கூட்டணியில் தொடர்வோம் .கூட்டணி தர்மத்தை கடைப்பிடித்து வந்தால் சட்டமன்ற தேர்தலில் அதிக வெற்றிபெறலாம். வேளாண் திருத்த சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக உள்ளது.இதற்கு  எதிராக திமுகவினர் அரசியல் செய்து வருகின்றனர். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதன் பிரதிபலிப்பு தெரியவரும் என்று கூறினார்.