அவனுக்கும் எனக்கு எந்த உறவும் இல்லை.! இறுதிச் சடங்கிற்கு செல்ல மறுத்த விகாஸ் தாய்..!

8 போலீசாரை கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே நேற்று என்கவுன்டர் செய்யப்பட்டார். நேற்று முன்தினம்  மத்திய பிரதேச உஜ்ஜைனியில் கைது செய்யப்பட்ட  விகாஸ் துபேவை போலீசார் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டபோது அவர்கள் வந்த கார் திடீரென கவிழ்ந்து விபத்து நடந்தது.

விபத்தில் காயமடைந்த போலீஸ்காரரின் ஒருவரிடமிருந்து விகாஸ் துபே கைத்துப்பாக்கியை எடுத்து கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை சரணடைய போலீசார் கூறினர். ஆனால், விகாஸ் துபே போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்.

இதனால், போலீசார் நடத்திய என்கவுன்டரில் விகாஸ் துபே உயிழந்தார்.  விகாஸ் துபே என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ள நிலையில், விகாஸ் துபே தாய் சரளா துபேவை (Sarla Dubey) கான்பூர் செல்லுமாறு காவல்துறை கேட்டபோது , அவர், நான் கான்பூருக்கு செல்ல விரும்பவில்லை “விகாஸ்-க்கும் எனக்கு எந்த உறவும் இல்லை” என கூறினார்.

இதற்கு முன் கான்பூர் கொலை வழக்கு பற்றிய செய்தி கிடைத்ததும், தனது மகன் இவ்வளவு பெரிய தவறு செய்து இருந்தால், காவல்துறை அவனை என்கவுண்டர் செய்யட்டும் என  கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan