அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது – நடிகர் விஜய் தேவரகொண்டா

அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது – நடிகர் விஜய் தேவரகொண்டா

Default Image

அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபலமான தெலுங்கு நடிகர் ஆவார். இவர் முதன்முதலாக நுவ்விலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தற்போது சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அந்த வகையில், ஆன்லைனில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், ‘அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை. ஆனால் அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது. காரணம் பணத்தையும், மதுவையும் வாங்கி கொண்டு வாக்களிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பலருக்கும் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்று தெரிவதில்லை. விமானத்தில் அனைவரும் ஏறி போகலாம். ஆனால் அனைவராலும் விமானி ஆக முடியாது. அது போலத்தான் அரசியலும்.  இதுபோன்ற அரசியலுக்கு சர்வாதிகாரம் மேல்.’ என தெரிவித்துள்ளார்.

Join our channel google news Youtube