அப்போவே போயிருந்தா கூட தெரிஞ்சிருக்காது – ஷிவானி குறித்து வருத்தப்படும் பாலா!

என்னால் ஒன்றும் முடியாது என கூறிக்கொண்டிருந்த போதே போயிருந்தால் கூட தெரிஞ்சிருக்காது, செமையாக விளையாடிவிட்டு சென்று விட்டால் அது தான் வருத்தமாக உள்ளது என ரம்யாவிடம் பாலா கூறுகிறார். 

இன்றுடன் 100 ஆவது நாளாக வெற்றிகரமாக ஒளிபரப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 6 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளே உள்ளனர். கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று ஷிவானி நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டார். ஆனால், இந்த வாரத்தில் இறுதியாக நடைபெற்ற டாஸ்கில், அனைத்து ஆண்களையும் பெண்களையும் வென்று 4 மணி நேரத்திற்கும் அதிகமான தனது கடின உழைப்பை கொடுத்திருந்தார் ஷிவானி.

இது குறித்து பாலாஜி ரம்யாவிடம் கூறுகையில், நான் அவ்வளவு தான் என கூறிக்கொண்டு இருந்த பொழுதே சென்றிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அனால் ஷிவானி செமையாக விளையாடி விட்டு வெளியே சென்றுள்ளது வருத்தமளிக்கிறது என கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

author avatar
Rebekal